அரியலூரில் கொரோனா விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம்

அரியலூரில் கொரோனா விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கி அரசு மருத்துவக் கல்லூரி வரை நடைபெற்ற, கொரோனா விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்ட துவக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்தார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி வரவேற்றார். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மினி மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் . அரியலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் பங்கேற்று, நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற, கொரோனா விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தில், பங்கேற்ற நபர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை, அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி வழங்கினார்.
அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளி பிரபு, அரியலூர் வட்டார சுகாதார ஆய்வாளர் சுமித் சைமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.