அரியலூரில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

அரியலூர் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அரியலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் அரியலூர் பேருந்து நிலையம் அருகே  நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் வரவேற்றார், இதனயைடுத்து மாவட்ட அதிமுக செயலாளர் தாமரை எஸ் ராஜேந்திரன் பேசியதாவது,

அண்ணா பிறந்தநாள் கொண்டாடுவதற்கு  தகுதியும் உரிமையும் உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டும்தான்.
பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை பிடித்தது திமுக. நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 இப்படி பல்வேறு வாக்குறுதிகள் இன்னும்நிறைவேற்றப்படவில்லை. மேலும், இவர்களது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது. தற்பொழுது மக்களை பாதிக்கும் வகையில் மின் கட்டணமும்உயர்த்தியுள்ளனர். அதிமுக ஆட்சியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா மருந்தகம், தாலிக்குத் தங்கம்,  அம்மா உணவகம், உள்ளிட்ட பல மக்கள் நலத் திட்டங்களை திமுக அரசு படிப்படியாக மூடி வருகிறது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தோம். ஆனால், திமுக ஆட்சியில் உள்ளாட்சிகளுக்கு போதிய நிதியை ஒதுக்காமல் “நம்ம ஊரு சூப்பர்’ என்று ஊருக்கு
ஊர் விளம்பர பலகை வைத்து பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர், எனவே மக்கள் விரோத ஆட்சி செய்து வரும் திமுகவை வீழ்த்த வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து களப்பணியாற்ற வேண்டும் என்றார்.

இதனையடுத்து கூட்டத்தில், அக்கட்சியின் அமைப்பு செயலாளர் சிவா,ராஜமாணிக்கம், எழுத்தாளர் பா.தில்லைசெல்வம், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆ.இளவரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் தங்கபிச்சமுத்து,அன்பழகன், ஓ.பி.சங்கர்,ஜீவாஅரங்கநாதன், கோபாலகிருஷ்ணா,அக்பர்ஷெரிப், மு.சாமிநான், ரீடு செல்வம், ஒன்றிய செயலாளர்கள் த.செல்வராசு, பொய்யூர் பாலசுப்ரமணியம்,வடிவழகன், சி.சாமிநாதன், அசோகன், கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், சிலம்பூர்மருதமுத்து,விக்கிரம பாண்டியன், பொதுகுழு உறுப்பினர்.வை.கோ.சிவபெருமாள்,தாமரைக்குளம்ஊராட்சி மன்றத் தலைவர் பிரேம்குமார், அரியலூர் ஊராட்சி ஒன்றிய சேர்மென் செந்தமிழ்செல்வி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் கூட்ட முடிவில் அரியலூர் நகரச் செயலாளர் செந்தில் நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 2 =