அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கி 5 பேர் பலி

அமெரிக்காவில் சிறிய ரக, தனியார் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் புலஸ்கி கவுன்டி பகுதியில் பில் மற்றும் ஹிலாரி கிளிண்டன் தேசிய விமான நிலையத்தில் இருந்து இரட்டை என்ஜின் கொண்ட, சிறிய ரக, பி.இ.20 என்ற எண் கொண்ட, தனியார் விமானம் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது. அந்த விமானம் ஒஹியோ மாகாணத்தில் உள்ள ஜான் கிளென் கொலம்பஸ் சர்வதேச விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. அந்த விமானத்தில் மொத்தம் 5 பேர் பயணித்து உள்ளனர். விமானம் புறப்பட்டு சில மைல்கள் தொலைவுக்கு சென்றதும் திடீரென விபத்தில் சிக்கி உள்ளது.

இதனை மத்திய விமான போக்குவரத்து கழகம் அனுப்பிய மெயில் ஒன்றும் தெரிவிக்கின்றது. இதனை தொடர்ந்து விசாரணையையும் தொடங்கி உள்ளது. அது பற்றிய தொடக்க கட்ட விசாரணை அறிக்கையையும் விரைவில் வெளியிடும். விபத்து நடந்ததும், லிட்டில் ராக் பகுதியின் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். விபத்தில் சிக்கிய அனைவரும் உயிரிழந்து உள்ளனர். எனினும், விபத்து ஏற்பட்டற்கான சரியான காரணம் எதுவும் தெரிய வரவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.