அன்னை தெரசாவின் நினைவு நாளை முன்னிட்டு ரூ.5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேஷன் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் அன்னதான திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் புனித அன்னை தெரசாவின் நினைவு தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சாமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பில் பவுண்டேசன் சார்பாக செயற்கை கால்கள் இரு சக்கர நாற்காலிகள் மூன்று சக்கர மிதி வண்டிகள் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் மற்றும் ஊன்றி செல்வதற்கு வேண்டிய வாக்கரும் வழங்கினர். மேலும் கொரனோ நோய் தொற்று காலத்தில் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருவாய் இன்றி வசிக்கும் 22 குடும்பங்களை மதர் தெரசா பவுண்டேஷன் தத்தெடுத்துக் கொண்டு அவர்களுக்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை மாதம் தோறும் வழங்கி வருவதுடன் பள்ளி மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் 37 ஆதரவற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக சுமார் 3 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதர் தெரசா பவுண்டேஷன் தலைவர் சவரிமுத்து தலைமை தாங்கினார். அறங்காவலர் சம்பத் ராகவன் முன்னிலை வகித்தார். அறங்காவலர் கோவிந்தராஜ்  நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் ராதாபாய் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட இயக்குனர் ரத்தீஷ் குமார் தளவாட மேலாளர் ஜெரோம்  நிர்வாக மேலாளர் மெர்சி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராணி விஜி மற்றும் தன்னார்வ தொண்டர்கள் வினோதினி கிறிஸ்டி மகேஸ்வரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.