அன்னவாசல் வட்டார வளமையத்தின் சார்பில்  புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி.

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன்  வழிகாட்டுதலின்படி  பரம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பேரணியும் கோலப் போட்டியும் நடைபெற்றது, பேரணியை மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி தொடங்கி வைத்தார். 

பேரணியில் அன்னவாசல் வட்டார கல்வி அலுவலர்  கலா, பரம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  ராமமூர்த்தி, அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரோஸ் மேரி சகாயராணி, பரம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகையா மற்றும் அன்னவாசல் ஒன்றிய  வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். 

பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் புதிய பாரத  எழுத்தறிவு திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி  செய்திருந்தார், போட்டியில் வெற்றி பெற்ற பங்கேற்பாளர்களுக்கு நிகழ்ச்சியின் முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டது.