அதிமுக கட்சியை அழிப்பதற்கு ஈபிஎஸ் சதி செய்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக பதவி  வகித்தவரும் ஓபிஎஸ்  ஆதரவாளரும் எம்எல்ஏவும் ஆன வைத்திலிங்கம்  திருவாரூர் மாவட்டம் ஓவல்குடியில் சசிகலாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். இதனையடுத்து தஞ்சாவூருக்கு வருகை தந்த வைத்திலிங்கம் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது எதார்த்தமாக சசிகலாவை சந்தித்ததாகவும்,  அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன்,ஏசி சண்முகம் உள்பட ஒதுங்கி இருக்கிறவர்களை ஒன்றிணைத்து இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.அதில் சசிகலாவும், டிடிவி தினகரனும் அடங்குவார்கள் என்று தெரிவித்தார். 

மேலும் கட்சியை அபகரிக்க துடிக்கும் இபிஎஸ்க்கு தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் அதிமுகதலைமை அலுவலகத்தில் காணாமல் போனதாக சொல்லப்படும் ஆவணங்களை தெரிவித்தால் அதற்கு நாங்கள் பதில் சொல்வோம் என்றும் இபிஎஸ் சொல்வதில் உள்நோக்கம் உள்ளது,  தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்தக் கட்சியை அழிக்க நினைக்கிறார் தொண்டர்கள் விரைவில் அதை புரிந்து கொள்வார்கள், யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக்கொண்டு கட்சியை அழிப்பதற்கு முயற்சி செய்கிறார் என்றும் திமுகவின் நல்ல திட்டங்களை பாராட்டுவதாகவும் அதே நேரத்தில் அதிமுக ஆட்சியில் கொடுத்த தாலிக்கு தங்கம் திட்டத்தை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார், ஓபிஎஸ் நேரம் வரும்போது சசிகலாவை சந்திப்பார் என்று தெரிவித்துள்ளார் அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டு சந்திப்பார் என்று தெரிவித்தார் இப்பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் அறிவுடை நம்பி சண்முகபிரபு மணிகண்டன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

78 − 72 =