அண்டக்குளம் சுகாதார நிலையத்தில் கர்பிணி பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்

அண்டகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்பிணி பெண்கள் தங்களின் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா, மருத்துவர் நிவேதிதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் நித்தியவதி, செவிலியர்கள், மேற்பார்வையாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டனர். இதில் ரத்த சோகைக்கான உணவு முறைகள், கை கழுவும் முறைகள், கர்ப்பிணிகளுக்கான சத்தான உணவு முறைகள், குழந்தைகளுக்கான முதல் 1000 நாள் பராமரிப்பு பற்றியும் விளக்கப்பட்டது. நிகழ்வில் 100க்கும் மேற்ப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டனர்.