அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், நாளை கோவை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், அடுத்தடுத்த நாட்களில் கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதிவரை கனமழையும், 11ஆம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 11ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் தெரிவித்துள்ளது.சென்னையிலும் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அடுத்த 48 மணிநேரத்தில்  இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமானதுவரை சில இடங்களில் மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.