ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பாக நேற்று நடத்தப்பட்ட கல்லூரி ஆண்டு விழாவில் முதல்வர் இளங்கோ வரவேற்புரையாற்றினார். அழகப்பா பல்கலை கழக மேனாள் துணைவேந்தருமான சொ.சுப்பையா தலைமை உரையாற்றினர் . மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் கலைமாமணி பாக்கியராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் மாணவர்களுக்கு அவர்கள் மீதும் அவர்களின் திறமையின் மீதும் நம்பிக்கை கொண்டால் வெற்றி என்பது எளிது என்று எடுத்துரைத்தார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் பேராசிரியர் அய்யாவு, அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்கள்.
விழாவில் கல்லூரியின் ஆண்டு விழா மலர் சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட்டது. அண்ணா பல்கலைகழகத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்க நாணயமும், சான்றிதழ்களும், மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டது. கல்லூரிக்கு 100 சதவீதம் வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மற்றும் கல்லூரியில் ஆண்டு விழாவிற்காக நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது.மேலும் அண்ணா பல்கலைகழகத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று 100% தேர்ச்சி பெற வைத்த கல்லூரியின் பேராசிரியர்களுக்கு தங்க நாணயமும் , சான்றிதழ்களும், மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டது. கல்லூரியில் பணிபுரியும் அனைத்து பேராசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் வடிவாம்பாள், கல்வியியல் கல்லூரியின் முதல்வர்கள்,பள்ளியின் முதல்வர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் துணை முதல்வர் மகாலிங்க சுரேஷ் நன்றியுரையாற்றினர். விழாவிற்கான ஏற்பாட்டை பேராசிரியர் விஜய் மற்றும் செல்வி கீர்த்தனா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.