ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் 13 வது விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும். கல்விக்குழுமத்தின் ஆலோசகருமான சொ. சுப்பையா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக வைரவ சுந்தரம், கபடி பயிற்றுனர் மற்றும் இராணுவ கபாடிக்குழு முதன்மை பயிற்றுனர் ஆகியோர் கலந்துகொண்டு. விளையாட்டின் மகத்துவம் பற்றியும் விளையாட்டின் மூலமாக கிடைக்கும் வேலைவாய்ப்பு பற்றியும் எடுத்துரைத்தார்.
மேலும். வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கினார், இதில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை எல்லோ ஹவுஸ் பெற்றது. இதில் கல்லூரி முதல்வர் அ. இளங்கோ, துணை முதல்வர் வி.மகாலிங்க சுரேஷ், ஒருங்குணைப்பாளர் வடிவாம்பாள் ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியாக கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சுந்தர் நன்றி கூறினார்.