ஸ்ரீ ராஜராஜன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் அண்ணா பல்கலை அளவிலான ஆண்கள் கபடி போட்டி

சிவகங்கை மாவட்டம், அமராவதிபுதூரில் இயங்கி வரும் ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரியில் அண்ணா பல்கலை அளவில் 2022ம் ஆண்டிற்கான ஆண்களுக்கான கபடிப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியின் துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் இளங்கோ வரவேற்றார். மேனாள் துணைவேந்தரும், கல்விக்குழும ஆலோசகருமான சுப்பையா தலைமை வகித்துப் பேசுகையில், வெற்றி, தோல்வியை சமமாக பாவிக்கும் மனப்பக்குவத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில், காவல் துணை கண்காணிப்பாளர் கணேக்ஷ் குமார் பேசுகையில், கபடி என்ற விளையாட்டை சங்க காலத்திலிருந்து  சடுகுடு என்ற பெயரில் தமிழர்கள் விளையாடி வந்துள்ளனர் என்றார்.

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே வெற்றி பெற்ற 19 அணிகள், இந்த போட்டியில் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் செயின்ட் ஜோசப் கல்லூரி சென்னை  அணியும், ஹிந்துஸ்தான் கல்லூரி கோவை அணியும் விளையாடியதில் செயின்ட் ஜோசப் கல்லூரி சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இரண்டாவது இடத்தை ஹிந்துஸ்தான் கல்லூரி கோவை அணியும், மூன்றாவது இடத்தை கிட் அண்ட் கிம் டெக்னிக்கல் கேம்பஸ் மானகிரி அணியும், நான்காவது இடத்தை கோவை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி அணியும் பெற்றனர்.

இதற்கான பரிசுகளை ஸ்ரீ ராஜ ராஜன் கல்விக்குழுமத்தின் ஆலோசகர் சுப்பையா வழங்கினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சுந்தர் நன்றி கூறினார். கல்லூரி துணை முதல்வர் மகாலிங்க சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் வடிவாம்பாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =