வ.உ.சிதம்பரனார் சிலை பாராளுமன்றத்திலும் தமிழ்நாட்டிலும் வைக்க புதுக்கோட்டை வ.உ.சி பேரவை வேண்டுகோள்

புதுக்கோட்டையில் வ.உ.சிதம்பரனார் 151-வது பிறந்ததின விழா லேணா திருமண மஹாலில் நடைப்பெற்றது,  இதில் வ.உ.சிதம்பரனார் சிலையை மத்திய, மாநில அரசுகள்  வைக்கவேண்டு மென வ.உ.சி பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  விழாவிற்கு அகில இந்திய வ.உ.சி பேரவை மாநிலத்தலைவர் லேணா மு.லெட்சுமணன் தலைமை தாங்கினார், அனைவரையும் விழாக்குழு மு.மாரிமுத்து வரவேற்றார், தாஞ்சூர் வைரமாணிக்கம், துரை மதிவாணன், நிலாமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், வ.உ.சிதம்பரனார் திருவுருவப்படத்தை மருத்துவர் ச.ராமதாஸ், வைரமாணிக்கம் திறந்து வைத்து மரியாதை செலுத்தினர்,  விழாவிற்கு வருகை தந்த நிர்வாகிகள் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 விழாவின் சார்பில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,  மாநிலத் தலைவர் லேணா மு.லெட்சுமணன் தீர்மானங்களை எடுத்துரைத்தார், அதில் இந்திய பாராளுமன்றத்திலும், தமிழகத்திலும் மேலும் புதுக்கோட்டையிலும் சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் இந்திய சுதந்திரத்தையே உயிர்மூச்சாக கொண்டிருந்த வ.உ.சிதம்பரனார் முழு உருவ சிலையை அமைத்து சிறப்பு செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுக்கு வ.உ.சி பேரவை விழாக்குழுவின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்படுகிறது. மேலும் வ.உ.சிதம்பரனார் 151-வது பிறந்ததினத்தை கொண்டாடிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்ளப்பட்டது, பல்வேறு தீர்மானங்கள் கூறப்பட்டது.

நிகழ்ச்சியில் இராமுக்கண்ணு, ஆரோக்கியசாமி, வேதரெத்தினம், பொன் வாசிநாதன், தா.மணி வைர தினகரன் மற்றும் குருசாமிமயில்வாகனன், குயிலிநாச்சியார், கதிர் நம்பி, கம்பன் கழக செயலாளர் சம்பத்குமார் வாசகர் பேரவை விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள், தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

40 − 33 =