வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள்: திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்தநாளை ஒட்டி அவரது படத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை ராஜாஜி சாலை, துறைமுகம் வளாகத்தில் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ படத்துக்கு தமிழக அரசு சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார்.

இந்நிகழ்வின் போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சுதேசி இயக்கத்திற்கு இலக்கணமாய்த் திகழ்ந்து, தியாகத்தின் முழு உருவான ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில் அவரது தியாகத்தைப் போற்றிடுவோம். தற்சார்பு-தன்னிறைவு போன்றவற்றை உண்மையாக நெஞ்சில் ஏந்திச் செயல்பட்ட அவரது வழிநடப்போம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

79 − = 75