வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  34-வது விளையாட்டு தின விழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நேற்று (சனிக்கிழமை) விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் முதன்மை விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே சிறப்பு விருந்தினராக அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ண ராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி சிறப்பித்தனர்.

எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பலவிதமான வண்ண மயமான நடனங்கள், பெற்றோர்களுக்கான போட்டிகள் ஆகியன நடைபெற்றன. இவ்விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார். இதில் பள்ளியின் நிர்வாக உறுப்பினர் சூசன் வில்சன், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி நாச்சம்மை, பள்ளியின் முதல்வர் சிராஜூதின், துணை முதல்வர் சுப்ரமணியன், மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர், தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 57 = 60