வேளாண் பொருள்களுக்கு சுங்க கட்டணத்தை ரத்து செய்தால் தக்காளி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது  புதுக்கோட்டையில் விக்கிரமராஜா பேட்டி

கொரோனா காலத்தில் இருந்தது போன்று வேளாண் பொருள்களுக்கு சுங்க கட்டணத்தை ரத்து செய்தால் தக்காளி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது என புதுக்கோட்டையில் விக்கிரமராஜா யோசனை தொரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி தென் மாவட்ட மக்களுக்கே தரமான பேக்கரி பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் புதுக்கோட்டை பேக்கரி மஹராஜில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தானியங்கி பேக்கிங் இயந்திரத்தை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருண் சின்னப்பா தலைமையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா திறந்து வைத்து பணியாளர்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்:-

கொரோனா காலத்தில் இருந்தது போன்று வேளாண் பொருள்களுக்கு சுங்க கட்டணத்தை ரத்து செய்தால் தக்காளி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பணிகளை சரிவர செய்யவில்லை குறிப்பாக அவர்களது தொகுதி வரையறையை தெரியாத எம்பிக்களே அதிகம் பேர் உள்ளனர். இது போன்ற எம்பிக்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பதற்கு வணிகர் சங்க பேரமைப்பு தேர்தலில் நிற்காமல் மறைமுகமாக யார் வரவேண்டும் யார் வரக்கூடாது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக வணிகர்கள் இருப்பார்கள்.

லூலு மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் தமிழக அரசிடம் பொய்யான தகவல்களை கூறி தங்களுடைய கிளைகளை திறந்து வருகின்றனர். குறிப்பாக தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்கும் என்று அரசிடம் உத்திரவாதம் அளிக்கின்றனர். ஆனால் தற்போது நிலையை அரசு ஆய்வு செய்தால் வேலைவாய்ப்பில் 5 சதவீத தமிழர்கள் கூட அதில் இல்லை இன்றைய தமிழக இளைஞர்களுக்கு வணிகர்கள் வேலை வாய்ப்பு கொடுப்பதற்கு தயாராக உள்ளோம் ஆனால் இளைஞர்கள் முன் வரவில்லை. ஜிஎஸ்டி முறைகேடு செய்யும் வணிகர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும் என்ற முடிவிற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் இதனை மறுபரிசீலனை செய்வதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளோம்.

தக்காளி குறைவான விலை விற்கும் நேரங்களில் மாநில அரசை நேரடியாக விவசாயிடமிருந்து விலை நிர்ணயம் செய்து தக்காளியை கொள்முதல் செய்து அதனை பவுடர் ஆக்கி விற்பனை செய்தால் வணிகர்கள் விற்பனை செய்ய தயாராக உள்ளோம் அது போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் தட்டுப்பாடு ஏற்படும் நிலையை அரசு முன்பே கணக்கிட்டு அதற்குண்டான முன்னேற்பாடு பணிகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

ஜிஎஸ்டி வரி வசூல் என்பது மிகப்பெரிய நெருக்கடியை வியாபாரிகளுக்கு தந்து கொண்டுள்ளது. மத்திய அரசு ஜிஎஸ்டியை அமலாக்கதுறையோடு இணைத்து வருகிறார்கள் வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்ற தகவல் தற்போது வந்துள்ளது. கொள்ளை அடிப்பவர்களுக்கு வேண்டுமானால் அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம் ஆனால் வணிகர்களிடம் அது போன்ற நிலை இருக்காது என்று கூறினார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜுலு,தமிழ்ச்செல்வன்,ஸ்ரீதர், சாகுல் ஹமீது, சாந்தம் சவரிமுத்து, கதிரேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.