வேளச்சேரி அருகே குப்பை சுத்தம் செய்யும் போது மின்சாரம் தாக்கியதில் தூய்மை பணியாளர் பலி

சென்னை வேளச்சேரி அருகே புதைவடக் கம்பி சரிவர புதைக்காததால் மின்சாரம் தாக்கியதில் தூய்மை பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (50). இவர் சென்னை மாநகராட்சியில் குப்பைகள் அகற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் அடையாறு மண்டலம் வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் 3-வது மெயின் தெருவில் குப்பை தொட்டியை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது புதை மின் வட கேபிள் சரியாக புதைக்கப்படாததால் சுத்தம் செய்த போது சேகருக்கு மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சேகர் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் சேகரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சேகர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + = 10