வேளச்சேரியில் ரூ.78,49 கோடியில் புதிய மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வேளச்சேரியில் புதிய மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை, வேளச்சேரியில், ரூ.78,49 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வேளச்சேரி மேம்பாலத்தின் வேளச்சேரி புறவழிச்சாலை – வேளச்சேரி-தாம்பரம் சாலை பாலப்பகுதியையும் செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூரில், ரூ.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெருங்களத்தூர் இரயில்வே மேம்பாலத்தின் செங்கல்பட்டு – சென்னை வழித்தடப் பாலப்பகுதியையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணிகள் , நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா, சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் பெ இறையன்பு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − = 10