வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் பெற்றார் நடிகர் சிலம்பரசன்

நடிகர் சிலம்பரசனின் கலைச்சேவையைப் பாராட்டி வேல்ஸ் பல்கலைக்கழகம் ‘கவுரவ டாக்டர்’ பட்டத்தினை சமீபத்தில் அறிவித்திருந்தது. இன்று நடந்த விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிலம்பரசனுக்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டத்தினை வழங்கினார்.

தனது அப்பா டி.ராஜேந்தர், அம்மா உஷா ராஜேந்தருடன் சென்று சிலம்பரசன் டாக்டர் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார். அவருக்கு டி.ராஜேந்தர் முத்தமிட்டு மன மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார். மேலும் இவ்விழாவில் விஜிபி நிறுவனத்தின் சந்தோஷம், விளையாட்டு வீரர் மாரியப்பனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, நடிகர் சிலம்பரசன் சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ வெற்றியைத்தொடர்ந்து ‘பத்துதல’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘வெந்து தணிந்தது காடு’, ‘கொரோனா குமார்’ இரண்டுப் படங்களையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். அவருடைய வேல்ஸ் பல்கலைக்கழகம்தான் தற்போது நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

54 − 53 =