வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயற்சி

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

வேலூர் மாவட்ட சத்துவாச்சாரியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் (60). தற்போது வழக்கறிஞராக உள்ளார். இவரது சகோதர, சகோதரிகள் மற்றும் குடும்பத்தினர் 8 பேர் நேற்று காலை வேலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து குறைதீர்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கம் முன்பு திடீரென அவர்கள் மறைத்து கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து 8 பேரும் உடலில் ஊற்றிக் கொண்டனர். பின்னர் அவர்கள் தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்கள் மீது தண்ணீரை போலீசார் ஊற்றி காப்பாற்றினர். பின்னர் அவர்களை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர். ஒரே நேரத்தில் 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + = 20