வேலூர் டி.கே.எம். மகளிர் கல்லூரியில் மனித உரிமை தின விழிப்புணர்வு கூட்டம்

வேலூர் அடுத்த சாய்நாதபுரம் தனபாக்கியம் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் மாவட்ட சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் மற்றும் மனித உரிமைகள் தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வலையமைப்பு குற்றங்கள் குறித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, வட்டாட்சியர், பெண்கள் அதிகாரம் மற்றும் சமூகநீதி அமைப்பு தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஒருங்கிணைப்பாளர் திவ்யா நந்தன், மாவட்ட சமூகநல அலுவலர் கோமதி, சைபர்கிரைம் ஆய்வாளர் அபர்ணா, காவல் துறை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பத்மா, கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி தாளாளர் மணிநாதன், கல்லூரி முதல்வர் பானுமதி, உள்ளூர் புகார் குழு ஒருங்கிணைப்பாளர் விஜயா, மகளிர் வழக்கறிஞர் சங்க தலைவர் சுமதி, கல்லூரி மாணவிகள், ஆசிரியை, ஆசிரியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

91 − = 85