வேலூர் மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடத்தை நிரப்ப, அரசால் அனுமதிக்கப்பட்டதையடுத்து, கீழ்க்காணும் தகுதிகளையுடைய வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அலுவலக உதவியாளர் ஒரு பணிக்காலியிடத்திற்கு, பொதுப் போட்டி முன்னுரிமை உள்ளவர் இன சுழற்சியில் கொரோனா தொற்றினாலோ, இதர காரணங்களாலோ பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் (மகன்/மகள்) விண்ணப்பிக்கலாம், இதற்கான கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்,
இரவுக்காவலர் ஒரு பணிக்காலியிடத்திற்கு, பொதுப் போட்டி முன்னுரிமை அற்றவர் இன சுழற்சிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம், இதற்கான கல்வித்தகுதி எழுத படிக்க தெரிந்தவர் (5-ம் வகுப்பு தேர்ச்சி)
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கையால் எழுதப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றின் நகலுடன் 12-01-2023 மாலை 5.45 மணிக்குள் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்திற்கு நேரிலோ/பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்