வேப்பனப்பள்ளி அருகே சாலையோர மரத்தில் வேன் மோதிய விபத்தில் பெண் பலி : 7 பேர் படுகாயம்

வேப்பனப்பள்ளி அருகே சாலையோர மரத்தில் வேன் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம். வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஐப்பிகானப்பள்ளி கிராமத்தில் இருந்து நேற்று காலை வேன் ஒன்று கான்கிரீட் பணிக்காக அப்பகுதியில் உள்ள 8 பேரை ஏற்றிக்கொண்டு வந்துக்கொண்டிருந்தது. அப்போது வேப்பனப்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்த போது சின்னகொத்தூர் அருகே சாலையில் அதிவேகமாக வந்த வேன் நிலை தடுமாறி மரத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஐப்பிகானபள்ளி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மனைவி மங்கம்மா(40) என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளர். மேலும் வேனில் இருந்த 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 5