வெங்காயம் விளைவித்துள்ள விவசாயிகளை காக்க தமிழக அரசு முன்வர வேண்டும் தமாகா வலியுறுத்தல்

தமிழகத்தில் வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளை காத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் துவார் ரெங்கராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட வெங்காயத்தை அறுவடை செய்து விற்பனைக்கு உரிய விளையில்லாததால் சாலையில் மூட்டை மூட்டையாக கொட்டும் அவல நிலைக்கு தள்ளபட்டுள்ளனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறிய நிலையில் வெளிமாநில வெங்காய வரத்தை தடை செய்து தமிழக விவசாயிகள் நலனை காத்திட வேண்டும். ஓசூர், சேலம், கிருஷ்னகிரி, தர்மபுரி பகுதிகளில் வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கியும் அவர்கள் மறுசாகுபடி செய்திட உரிய கடன் வசதியை வழங்கி வெங்காய விவசாயிகாளின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

72 + = 73