வீராணக்குன்னம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வீராணக்குன்னம் கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் வழிகாட்டலில் மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

பின்னர் அவர் பேசுகையில், விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில்  தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு வருகிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசின் சாதனைகளை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் உருவாக்கப்பட்டதால் சுற்று பட்டுள்ள தச்சூர், கீழ்ப்பட்டு காவாது, தேவாதூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயனடைவதால் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்ததற்கு மனதார நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக கிளை நிர்வாகிகள்  மூர்த்தி, ராமு, கன்னியப்பன், முருகவேல், ஜெயராமன், முன்னாள் ஊராட்சி தலைவர் துரை பாபு, செந்தில், குன்னன் மற்றும் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.