Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக...
Homeஅரசியல்வீதிகளில் விற்கப்படும் சிம்கார்டுகளால் நாட்டின் இறையாண்மைக்கு கேடு நெட்வொர்க் நிறுவனங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட புதுகை வரலாறு...

வீதிகளில் விற்கப்படும் சிம்கார்டுகளால் நாட்டின் இறையாண்மைக்கு கேடு நெட்வொர்க் நிறுவனங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட புதுகை வரலாறு வேண்டுகோள்

ஆன்லைனில் செல்போன்கள் விற்கப்படுவதை போல் வீதிகளில் சிம் கார்டுகள் விற்கப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் மிகவும் சவாலாக உள்ளதாக செல்போன் விற்பனையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட மொபைல் வணிகர்கள் நல சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:ஆயிரக்கணக்கான மொபைல் வணிகர்களின் வணிகம் ஆன்லைனால் பாதிக்கப்படுகிறது வணிகத்தில் மொபைல் வணிகம் சற்று மாறுபட்டதாகும். ஆன்லைன் வருவதற்கு முன்பு எல்லா வணிகத்தையும் போல் நன்றாக மனநிறைவுடன் வணிகம் நடந்தது. கடந்த சில வருடங்களாக ஆன்லைன் ஆதிக்கம் அதிகமானதால் எல்லா வணிகங்களும் குறிப்பாக மொபைல் வணிகம் முழுவதும் பாதிப்புள்ளாகியுள்ளது.சுமார் 30℅ முதல் 40℅ வரை ஆன்லைன் மூலமே பொருள்கள் வாங்கப்படுகிறது. ஒரு மொபைல் வாங்கலாமா என தீர்மானிக்கும் வாடிக்கையாளர் கடைகளில் விசாரித்து வாங்க முற்படும் போது 100 அல்லது 200 ரூபாய் வித்தியாசம் ஆன்லைன் மூலம் வாங்கவே வாடிக்கையாளரை தீர்மானிக்க வைக்கிறது. இது ஒருபுறமிருக்க நெட்வொர்க் நிறுவனங்கள் கடைகள் மூலம் புதிய இணைப்புகள் வழங்க வேண்டும் என்ற நிலையை பின்னுக்கு தள்ளி அல்லது கண்டுகொள்ளாமல் தான் தோன்றி தனமாக வணிகர் வாழ்வாதரத்தை பற்றி சிறிதும் கவலைப்படாமல் சட்டத்திற்கு முரணாக வீதிகளில் பொது இடங்களில் வீடுவீடாக சென்று குறைந்த விலைக்கு சிம் கார்டுகள் வழங்குவதும் சிம் கார்டுகளை மாற்றித்தருவதும் (MNP) தொடந்து நடைபெறுகிறது.

நெட்வொர்க் நிறுவனங்கள் மாவட்டத்தில் இருக்கக்கூடிய டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டார்கெட்டை அடைவதற்கு பொதுமக்களின் சுய விபரங்களை தவறான வழியில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் அதிகப்படியான குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றது. இலவச சிம் கார்டு மற்றும் ரோட்டோரங்களில் குடை போட்டு விற்பவரிடம் சிம் கார்டுகளை வாங்குவதால் ஏற்படும் ஆபத்து ஏராளம் சிம்கார்டு ஆக்டிவேசன் செய்ய கொடுக்கும் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவை சிம்கார்டு ஆக்டிவேசன்காக மட்டுமே தான் பயன்படுத்துகிறார்களா? என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். தங்களின் சுய அடையாளத்தை அவர்கள் வேறு வழியில் பயன்படுத்துகின்றனர் என்பது எங்களின் குற்றச்சாட்டு. பொதுமக்கள் கொடுக்கும் ஆதார் கார்டை கொண்டு வங்கி கணக்கிலிருந்து யார் வேண்டும் என்றாலும் பணம் எடுக்கலாம் என்ற நிலை தற்போது நடைமுறையில் இருப்பதை பொது மக்கள் உணர வேண்டும்.

சிம் கார்டுக்காக உங்கள் போனில் வரும் ஓடிபிஐ கொடுத்து பணத்தை ஏமாந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கும் அவர்கள் கடந்த காலங்களில் தமிழகத்தில் நடைபெற்றுள்ள கொலை கொள்ளை சம்பவங்களில் போலீசார் துப்பு துலங்கியது மேற்கண்ட சம்பவங்களில் தொடர்பு இல்லாத சம்பந்தம் இல்லாத நபர்களே மொபைல் நம்பர் வாங்குவதற்கு அவர்கள் ஏற்கனவே கொடுத்திருந்த அடையாள அட்டைகள் மூலம் மாட்டி வாழ்க்கையை தொலைத்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன அதனால் பொறுப்புள்ள நெட்வொர்க் நிறுவனங்கள் குற்றச் சம்பவங்களுக்கு ஊற்றாக இருக்கக்கூடிய தங்களின் தொழில் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். இதை முறை படுத்த அல்லது தடைசெய்ய மொபைல் சங்கங்கள் காவல் நிலையங்களில் நெட் ஒர்க் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த பயனும் ஏற்படவில்லை. மத்திய மாநில அரசுகள் இந்த பிரச்சனைகளை கவனத்தில் கொண்டால் மட்டுமே மொபைல் வணிகமும் அதை சார்ந்த வணிகர்களும் அவர்களை நம்பியுள்ள குடும்பங்களையும் எதிர்கால வாழ்வாதரத்தை காப்பாற்ற முடியும் நாட்டின் இறையானமையும் பாதுகாக்கப்படும் என்று  புதுக்கோட்டை மாவட்ட மொபைல் வணிகர்கள் நல சங்கம் வலியுறுத்துகின்றது.

x
error: Content is protected !!
%d bloggers like this: