புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மின் அலுவலகம் சமீப காலமாக இடிந்து பாழடைந்த கட்டிடங்களாக இருக்கும் நிலையில் விஷப் பாம்புகள் வாழும் கூடாரமாகவும் மாறி வருகிறது என விமர்சனங்கள் எழுந்த நிலையில். மின் உபகரணங்கள் மின் உபயோக பொருட்களை எடுக்க செல்லும் மின் ஊழியர்கள் விஷ பாம்புகளை பார்த்து அச்சப்படும் சூழ்நிலை இருப்பதாகவும் மேலும். பாழடைந்த கட்டிட அலுவலக இடங்களை அப்புறப்படுத்தி புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கும், மின் அலுவலக ஊழியர்களுக்கும் விஷ பாம்புகளிடம் இருந்து எப்போது விடுதலை என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
மேலும் பாழடைந்த கட்டிடங்களை அப்புறப்படுத்தி புதிய அலுவலக கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும். மேலும் மின் அலுவலக துறை சார்ந்த அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு பழைய கட்டிடங்களை அப்புறப்படுத்தி பாம்புகளிடமிருந்து பொது மக்களையும் மின் அலுவலக பணியாளர்களையும் விஷப் பாம்புகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என மின் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.