அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு புதுக்கோட்டையில் புகைப்படக் கண்காட்சி நேற்று திறக்கப்பட்டது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு பிப்.4,5,6 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. மாநாட்டையொட்டி நேற்று புகைப்படக் கண்காட்சி திறப்புவிழா நடைபெற்றது. கண்காட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில செயலாளர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாநில துணைத் தலைவர் டெல்லிபாபு, விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர், மாநிலக்குழு உறுப்பினர் வீ.மாரியப்பன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
உழைப்பாளிகளைப் பாதுகாக்காத நாடு முன்னேறியதாக சரித்திரமில்லை.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், தேர்தல் சமயத்தில் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தியே கூட்டணி உடன்பாடு செய்யப்படுகிறது. அதன்பிறகு, மக்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றப்படாத பட்சத்தில் அதை சுட்டிக்காட்டுவது, விமர்சிப்பது ஜனநாயகக் கடமை. அதைத்தான் நாங்கள் செய்துகொண்டு இருக்கிறோம் என்றார்.