விலங்குகளிடமிருந்து விளைநிலங்களை பாதுகாக்க வேண்டும் தென்காசி எஸ்டிபிஐ  மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் 

தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் வைத்து நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் சிக்கந்தர் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் திவான் ஒலி மாவட்ட துணைத் தலைவர் செய்யது மஹ்மூத் செயலாளர் நூர் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் நிஜாம்முகைதீன் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் கடந்த கால மக்கள் பணிகளை கேட்டு அறிந்து ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டி வடகரை, பண்பொழி, மேக்கரை கிராமங்கள் அமைந்துள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் மா, பலா, தென்னை, வாழை பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

கோடை காலங்களில் யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன எனவே விவசாய நிலங்களையும் விவசாயிகளையும் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்காசி பகுதிகளில் உள்ள போக்குவரத்து நெரிசலைசரி செய்ய வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்டத் துணைத் தலைவர் செய்யது மஹ்மூத் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

87 + = 96