விரைவில் அ.தி.மு.க., பொதுக்குழுவை கூட்டுவேன்: ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்ட தனது அணி அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு வாழ்த்து கூறினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது:

வெகு விரைவில் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெறும். மாவட்ட, மாநில வாரியாக நிர்வாகிகள் நியமனம் தற்போது நடைபெற்று வருகிறது. பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்  பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இது முழுமை பெற்ற பின்னர் அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்படும்.

இதன் பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திப்பேன். அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை வாய்ப்பு கிடைத்தால் விரைவில் சந்திப்பேன். மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்ததும், சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை  சந்தித்ததும் மரியாதை நிமித்தமானது தான். அரசியல் ரீதியானது அல்ல. எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி அமைக்க போவதாக கூறியதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் ஜே.சி.டி.பிரபாகர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 46 = 48