விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை உபகரங்கள் வழங்குவதற்கான மதிப்பீடு முகாம்

விருதுநகர் மாவட்ட ம்,சாத்தூரில் 22.09.2022 அன்றும், வெம்பக்கோட்டையில் 23.09.2022 அன்றும்  மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை உறுப்புக்கள், உபகரங்கள் வழங்குவதற்கான மதிப்பீடு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர்  ஜெ.மேகநாதரெட்டி  தகவல் தெரிவித்துள்ளார்.

இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகம் (ALIMCO) இந்தியன் ஆயில்  கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடி மக்களுக்கு தேவையான செயற்கை உறுப்புகள் மற்றும் உபகரணங்கள் அவர்களது தேவை மற்றும் தகுதியின் அடிப்படையில் வழங்க ஏதுவாக, மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் 19.09.2022 முதல் 29.09.2022 வரை நாளொன்றுக்கு ஒரு வட்டாரம் வீதம் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சாத்தூர் மிளகாய் வத்தல் வியாபாரிகள் மண்டபத்தில் 22.09.2022 அன்றும், வெம்பக்கோட்டை மீனாட்சி மஹாலில் 23.09.2022 அன்றும் காலை 10 மணி முதல் மாலை 4.00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே, இம்முகாமில் தகுதியுடைய தேவையுள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அசல் மற்றும் நகல் Passport size புகைப்படம் 5, மாத வருமானம் ரூ.22,500-க்குள் உள்ள வருமானச் சான்று ஆகியவற்றுடன் பங்கேற்று பயன்பெறலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மூன்றுச் சக்கர வாகனம், நடைக்குச்சி, காதொலி கருவி, கண் கண்ணாடிகள், செயற்கை கை, கால்கள், போன்ற எண்ணற்ற உபகரணங்களும் உதவிகளும் பெற்று பயன்பெறலாம்.   

மேலும் இம்முகாமில் புதிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் UDID மாற்றுத்திறனாளி அட்டை பதிவு செய்யும் முகாமும் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

80 + = 90