விருதுநகர் மாவட்டத்தில் அரசு ,தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

விருதுநகர் மாவட்டம் ,அரசு /தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு 25.08.2022- க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட அரசு / தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2022-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வின் மூலம் பயிற்சியாளர்களின் சேர்க்கையினை நிரப்பிட 18.08.2022 முதல் 25.08.2022 முடிய Online மூலம் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:- www.skilltraining.tn.gov.in பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி  8-ம் வகுப்பு தேர்ச்சி / 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள். விண்ணப்பக்கட்டணமாக ரூ.50/-யை Debit Card / Credit Card / GPay/ Internet Banking ஆகியவற்றின் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மடிக்கணினி / மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) / சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட்  / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை. விருதுநகர் / அருப்புக்கோட்டை /சாத்தூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர Online மூலம் விலையில்லாமல் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் / 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) / பள்ளி மாற்றுச்சான்றிதழ் / சாதிச்சான்றிதழ் /ஆதார் அட்டை / பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் விவரம்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் : விருதுநகர்: 04562-294382, அருப்புக்கோட்டை: 04566-225800 சாத்தூர்: 04562-290953 மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விருதுநகர் – 04562-294755 , குறிப்பு: 2022-ம் ஆண்டில் ஏற்கனவே Online மூலம் விண்ணப்பித்து சேர்க்கை ஆணை கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் புதியதாக விண்ணப்பிக்க தேவையில்லை, என மாவட்ட  ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

29 − = 19