விருதுநகரில் 200 அங்கன்வாடி மையங்களுக்கு 50 அங்குல ஸ்மார்ட் டிவி வழங்கும் நிகழ்ச்சி!

விருதுநகர் வட்டம், கருப்பசாமி நகரில் அங்கன்வாடி மையங்களை ஸ்மார்ட் அங்கன்வாடி மையங்களாக மாற்றம் செய்திடும் பொருட்டு ரூ.1 கோடி மதிப்பீட்டில் 200 அங்கன்வாடி மையங்களுக்கு 50 அங்குல ஸ்மார்ட் டிவி வழங்கும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி துவக்கி வைத்தார்.

விருதுநகர் முன்னேற விழையும் மாவட்டத்தின் சிறந்த செயல்பாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதி ஆயோக் ஜிகா நிதியினை பயன்படுத்தி விருதுநகர் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மைய குழந்தைகளின் முன்பருவ கல்வி கற்கும் திறனை அதிகரிக்கும் விதமாக 200 அங்கன்வாடி மையங்களை ஸ்மார்ட் அங்கன்வாடி மையங்களாக மாற்றம் செய்திடும் பொருட்டு ரூ.1 கோடி மதிப்பீட்டில் 200 அங்கன்வாடி மையங்களுக்கு 50 அங்குல ஸ்மார்ட் டிவி, ஸ்டெப்ளைசர், பென்டிரைவ் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 5 = 5