விராலிமலை குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு – மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஆய்வு

புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரையின் படி மாவட்ட உதவி திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட பள்ளி செல்லாக் குழந்தைகளின் ஒருங்கிணைப்பாளர் விராலிமலை ஒன்றியத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணியை ஆய்வு செய்தார்.

அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த சத்தியபிரியா என்ற பத்தாம் வகுப்பு இடைநிற்றல் மாணவிக்கு பள்ளியில் சேர்ந்து பயில உரிய ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் கணக்கெடுப்பு பணியில் கண்டறியப்பட்ட பத்தாம் வகுப்பு இடைநிற்றல் மாணவன் இரகுநாத் இன்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பில் நேரடியாக சேர்க்கப்பட்டு மாணவனுக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரெ.சுரேஷ் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் வசந்தி அரசின் நலத்திட்டங்களை வழங்கினார்கள். மேலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குளவாய் பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மூலம் வழங்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை பார்வையிட்டார். மேலும் பெண்கள் கழிப்பறை கட்டிட பணியை ஆய்வு செய்தார்.
கீழசின்ன பழனி பட்டி, பகுதிகளில் இடைநிற்றல் மாணவர்கள் பற்றிய கணக்கெடுப்பு
பணியையும் ஆய்வு செய்தார்.

விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெற்று வரும் கணினி பயிற்சியையும் ஆய்வு செய்தார்.ஆய்வின் போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் வட்டாரக் கல்வி அலுவலர் உமாதேவி மேற்பார்வையாளர் பொறுப்பு புவனேஸ்வரி ஆசிரியர் பயிற்றுநர் பெரியசாமி மற்றும் சத்யபிரியா ,கணனி பயிற்சி மையத்தின் கருத்தாளர் வின்சென்ட் ராஜ் உடனிருந்தனர்.