விராலிமலை அருகே எருதுகுட்டை பெருமாள் கோவில் திருவிழா ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

விராலிமலை அருகே எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோவில் மாலை தாண்டும் விழா பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
விராலிமலை தாலுகா ஜெயமங்கலம் குப்பாநாயக்கர் பண்ணையில் எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் திருவிழாவை முன்னிட்டு மாலை தாண்டும் விழா(எருது விடும் விழா) வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம் . ஆனால் பல்வேறு காரணங்களுக்காக இந்த விழாவானது சுமார் 10வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வருடம் இக்கோவில் திருவிழா நடத்துவதாக ஊர்பொதுமக்கள் முடிவு செய்து அதன்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழாவானது தொடங்கியது. அன்று முதல் அப்பகுதி பொதுமக்கள் அங்குள்ள எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோவிலிலேயே தங்கி விரதமிருந்து சமைத்து உண்டு வந்தனர். அதனைதொடர்ந்து நேற்று  விழாவானது தொடங்கியது. காலை முதலே பெரூர், தேசிய மங்களம், வையம்பட்டி, வில்லுகாரன்பட்டி, தொப்பம்பட்டி, தோகமலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட மாடுகளுக்கு உள்ளூர் பெண்கள் பாரம்பரிய முறைப்படி பாதபூஜைகள் செய்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து ஜெயமங்களத்திலிருந்து சுமார் 2 கி.மீ அப்பால் உள்ள பகுதியிலிருந்து அனைத்து மாடுகளையும் ஒரே நேரத்தில் அவிழ்த்து விடப்பட்டு அதில் முதலாவதாக அய்யாச்சாமி மந்தைக்கு வந்தடைந்த மாட்டிற்கு சிறப்பு பரிசாக மஞ்சள் மற்றும் எலும்பிச்சம்பளம் கொடுக்கப்பட்டது. இதில் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வானதிராயன்பட்டி, ஜெயமங்களம், விராலிமலை உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

23 − = 19