விபத்தை தவிர்க்க சாலைகளில் வேகத்தடை: அரியலுார் ஆட்சியர்

அரியலூர் மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க சாலைகளில் வேகத்தடை அமைக்க  சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

கிராமப்புற சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் சாலைபாதுகாப்பு தொடர்பான வேகத்தடை அமைக்க வேண்டும். பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, காவல் நிலையம், அஞ்சல் நிலையம், வங்கி மற்றும் சந்தைப்பகுதிகளில் வாகனங்களினால் விபத்து ஏற்படுவதை தவிர்த்திட வேகத்தடை அமைக்க வேண்டும்.

வேகத்தடை அமைத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் வாகனங்களில் செல்லும் போது விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + = 8