விநாயகர் சிலைகளை விற்க அனுமதி வேண்டி கலெக்டரிடம் மனு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று சிலையை விற்க அனுமதி வேண்டும்  என கோரிக்கை விடுத்தனர்.

காலம் காலமாக களிமண் மற்றும் காகித கூழினாள் விநாயகர் சிலைகளை செய்து வருகின்றோம். கடந்த ஆண்டு கொரோனா பரவலால் விநாயகர் சதுர்த்தியை தமிழக அரசு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி தடை செய்தது.

இதனால் கடந்த ஆண்டு தயார் செய்த விநாயகர் சிலைகள் அனைத்தும் முற்றிலும் அழியும் நிலையில் உள்ளன.

வங்கியில் பெற்ற கடனும்,வெளியில் பெற்ற கடனும் வட்டி கூட கட்டமுடியாத நிலையில் உள்ளோம். ஆண்டுக்கு ஒருமுறை வரும் விநாயகர் சதுர்த்தியை நம்பி,ஆண்டு முழுவதும் செய்த விநாயகர் சிலைகள் முற்றிலும் பாதிக்கப்படுகின்றன, இந்த ஆண்டாவது விநாயகர் சதுர்த்தியை கட்டுப்பாடுகளுடன்  நடத்த அனுமதி வழங்க வேண்டும் என  விநாயகர் சதுர்த்தியை திருவிழா போல் எண்ணாமல் இதற்குப் பின்னால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது என்று என்னி  மாவட்ட நிர்வாகம் அதனை பார்க்க வேண்டும்.

இதுவரை தமிழ்நாடு அரசும்,மாவட்ட நிர்வாகமும்,மத்திய அரசும் இதுவரை எங்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் வழங்கவில்லை. இதனை நம்பியுள்ள எங்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் எதிர்காலம், முதியோர்களின் மருத்துவசெலவு, எங்களின் குடும்ப செலவு ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்படும் நிலையில் தள்ளப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி எங்களின் விநாயகர் சிலை கலைக்கூடங்களை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் சேர்ந்து சீல் வைத்தது.

இதனால் கடந்த ஆண்டு எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. எனவே புதியதாக தொழில்கள் தொடங்க வங்கியில் கடன் உதவி வழங்க தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும். எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத்து எங்களது விநாயகர் சிலை தயாரிப்பாளர்களுக்கு தனிக்குழு அமைத்து மீண்டும் எங்களது பணி தொடர வங்கியில் கடன் வழங்க வேண்டும்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை விற்பனை செய்ய எந்த ஒரு தடையும் இல்லாமல் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 4 =