இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது கடந்தாண்டு கொரோனா காரணமாக இந்து முன்னணியே சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடந்தது.தற்போது கொரோனா குறைந்துள்ளது. பல மதங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பள்ளிகள் திறக்கப்படுகிறது. டாஸ்மாக் படு ஜோராக நடைபெறுகிறது.
எனவே மக்கள் பாதிக்காமல் சமூக இடைவெளியுடன் இவ் விழாவை கொண்டாட எங்கள் மாநில நிர்வாக குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுக்க 1.25 லட்சம் இடங்களிலும் கோவையில் 4 ஆயிரம் இடங்களிலும் விநாயகர் சிவைக்க பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் இந்து கோவில்கள் மட்டும் இடிக்கப்படுகிறது. அதிகாரிகள் முதலமைச்சருக்கு தவறான தகவல் கொடுத்து திசை திருப்புகின்றனர். மேலும் பேப்பர் கூழ், கிழங்கு மாவு கொண்டு சிலைகளை தயாரிக்கிறோம் அதனால் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது நீர்நிலைகள் மாசுபடாது.என கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின் போது இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார்,மாவட்ட தலைவர் தசரதன்,மாவட்ட செயலாளர் தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.