விநாயகர் சதுர்த்தி விநாயகரை கண்காணிக்க சிசிடிவி கேமரா; புதுக்கோட்டை எஸ்.பி திறந்து வைத்தார்

குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கும், விநாயகர் சிலை ஊர்வலத்தை கண்காணிக்கவும் புதுக்கோட்டை மாவட்டத்தில 75 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு கேமரா அறையை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இன்று திறந்து வைத்தார்.

மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர உட்கோட்டத்தில் எதிர்வரும் 20.09.23-ம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலையை புதுக்குளத்தில் கரைக்க எடுத்து செல்லும் போது குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும், விநாயகர் ஊர்வலத்தை கண்காணிக்க திருவப்பூ, பிஎல்ஏ ரவுண்டானா, கேகேசி கல்லூரி சாலை, பழையபேருந்துநிலையம், கீழ ராஜவீதி, திலகர்திடல், பழனியப்பா கார்னர், மச்சுவாடி, சின்னப்பா பூங்கா ஆகிய பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்ட எல்லைகளை கண்காணிக்கவும், குற்ற சம்பவங்கள் நடக்காமல் கண்காணிப்பதற்கு புதுக்கோட்டை உட்கோட்டத்தில் மொத்தம் 75 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அவற்றை கண்காணிப்பதற்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதியதாக துவங்கப்பட்டுள்ள நவீன கண்காணிப்பு கேமரா அறை திறக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.