விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை மக்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதற்கிடையில் விழாவைக் கொண்டாடப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும் சிலைகள் வைப்பதற்கும் அனுமதியில்லை. அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை.மேலும் தனி நபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராக சென்று சிலையை கரைப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் வழிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதேபோல், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து, சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும், ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை.மேலும், பொதுமக்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை தனி நபராக எடுத்துச் சென்று அருகிலுள்ள ஆலயங்களில் வைத்து செல்லலாம் என்றும் இங்கு வைக்கப்படும் சிலைகளை முறையாக கரைப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தி பாதுகாப்புக்காக மாநகர காவல் ஆணையர் தலைமையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் ஏற்கனவே பதட்டமான பகுதிகள் என அறியப்பட்ட புளியந்தோப்பு மற்றும் திருவல்லிக்கேணி காவல் மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar Articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 5 =

Advertismentspot_img

Instagram

Most Popular

x
error: Content is protected !!
%d bloggers like this: