விதிகளை மீறியதால் சிவகார்த்திகேயன் ‘டான்’ படக்குழுவினர் மீது வழக்கு

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் கொரோனா விதிகளைமீறி படப்பிடிப்பு நடத்திய நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அறிமுக நடிகை பிரியங்கா ஆகியோர் நடிக்கும் ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை பகுதியில் நேற்று நடைபெற்றது.

இதில், கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி அதிக அளவில் கூட்டம் சேர்த்து படப்பிடிப்பு நடைபெற்றதாக புகார் எழுந்தது. ஆனைமலை காவல் நிலையத்தில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் 30 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் வருவாய்த் துறை சார்பில் 19 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.