விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய பிரிவு மாநில துணைச் செயலாளர் மீது ஆவுடையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு

விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய பிரிவு மாநில துணைச் செயலாளர் கண்ணன் மீது ஆவுடையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு அவரை தேதி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா புண்ணியவயல் ஊராட்சியில் உள்ள கருப்பூர் கிராமத்தில் பிச்சை மகன் கண்ணன் என்பவர் விடுதலை சிறுத்தை கட்சியில் மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளராக இருந்து வருகிறார், இவர் அவர் வீட்டருகே இளங்கோவன் என்பவருடைய பட்டா இடத்தை திட்டமிட்டு அபகரிக்கும் நோக்கத்தோடு அவருடைய இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து விறகு கட்டுகளை போட்டு சண்டை இட்டு தாக்கியதாக கூறப்படுகிறது மேலும் இவர்கள் இருவரும் ஒரே சமூகம்.  

இளங்கோவன் காயமடைந்ததையடுத்து ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் கடந்த 17ம் தேதி புகார் அளித்திருந்தார். காவல் உதவி ஆய்வாளர் சோமசுந்தரம் நேரடியாக சம்பவ இடத்தில் விசாரணை  செய்யும் பொழுதே காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் இளங்கோவன் இடத்தை தன்னுடைய இடம் என்று மிரட்டும் தோணியில் பேசி உள்ளார் கண்ணன். மேலும் இவர் தலித் மக்கள் தலைவர் என்று சொல்லிக் கொண்டு தலித் மக்கள் செல்கின்ற பொதுப் பாதையையும் அடைத்து வைத்துள்ளதால் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் கண்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ்வழக்கு பதிந்து கண்ணனை வலை வீசி தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 1 =