
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கஜுவாக்காவில் 17 அடி உயரமுள்ள ஸ்ரீ அனந்த பஞ்சமுக மகா கணபதி சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த விநாயகர் சிலையை வடிவமைப்பதற்காக அனக்கா பள்ளி மாவட்டம் மற்றும் கொல்கத்தாவில் இருந்து 5 டன் எடையுள்ள களிமண் கொண்டுவரப்பட்டு சிலை செய்யப்பட்டு உள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பிரபல சிலை வடிவமைப்பு கலைஞர் கொத்த கொண்ட நாகேஷ் தலைமையில் சிலையை வடிவமைப்பதற்காக மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 24 பேர் கொண்ட குழுவினர் சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தியாவில் மிகப்பெரிய விநாயகர் சிலை இதுதான் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.