“வாழ்த்துகள் அதிவீரன்” உதயநிதிக்கு மாரி செல்வராஜ் ஆதரவு

உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில் ‘மாமன்னன்’ பட வீடியோ காட்சியுடன், “வாழ்த்துகள் அதிவீரன்” என பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் – வாழ்த்துகள் அதிவீரன்” என பதிவிட்டுள்ளார். மேலும் தனது ‘மாமன்னன்’ படத்தில் ரத்னவேலு கதாபாத்திரத்தை நோக்கி சமத்துவத்தை வலியுறுத்தும் அதிவீரன் கதாபாத்திரம் பேசும் வசனத்தை கட் செய்து பதிவிட்டுள்ளார்.

“இனிமேல் உன்னுடைய உருட்டல், மிரட்டலுக்கெல்லாம் யாரும் பயப்படப்போவதில்லை. இதுக்கு அப்றமும் நீ துப்பாக்கிய தூக்கி மிரட்டுனாலும் அவன் அவன், அவன் திசைய நோக்கி ஓடிட்டு தான் இருப்பான்” என்ற வசனத்துடன், இறுதியில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறளுடன் அதன் விளக்கத்தை வடிவேலு சொல்லும் காட்சியையும் பதிவிட்டு, உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதை உணர்த்தியுள்ளார்.