வாண்டாகோட்டை விஜிஎஸ் இல்ல காதணி & திருமண விழா நாளை மறுநாள் பிப்ரவரி5ம் தேதி திருவரங்குளத்தில் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வாண்டாகோட்டை நெல் வியாபாரி தொழிலதிபர் கோவிந்தராசு & சித்ரா தம்பதியினரின் மகன் சுரேஷுக்கு காதணி விழாவும், அவரது சகோதரி ரேணுகாவிற்கும் குளத்தூர் தாலுகா, இறையூரை சேர்ந்த மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் முருகையா & சோலையம்மாள் தம்பதியினரின் மகன் அடைக்கலராஜுக்கும் திருமண விழா ஆகிய இரண்டு நிகழ்வுகள் பெருந்தொழில் அதிபர், புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் ராமச்சந்திரன், புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வி.சி.ராமையா ஆகியோரது தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், திருவரங்குளம் சேர்மன் தங்கமணி வள்ளியம்மை, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் அரு வடிவேல், எஸ்விஎஸ் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் ஜெயக்குமார், பூவரசகுடி கூட்டுறவு வங்கி தலைவர் மணியம்பலம் வைத்திலிங்கம், ஆலங்குடி பழனியப்பன் செட்டியார், நக்கீரர் வயல் கிருஷ்ணசாமி கண்டியர், பாலக்குடிப்பட்டி நீர் பாசன குழு தலைவர் முத்து -சித்ராதேவி, காவல்துறை உதவி ஆய்வாளர் சுப்பையா- கலையரசி, உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் கலந்து கொண்டு விழாவில் செல்வங்களை வாழ்த்தி சிறப்பிக்க உள்ளனர்.