வாட்ஸ் அப் சேனலில் இணைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்கள் வரிசையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாட்ஸ் அப் சேனலில் இணைந்துள்ளார்.

வாட்ஸ் அப்பில் ‘சேனல்’ என்ற டெலிகிராம் போன்ற அம்சத்தை இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் சமீபத்தில் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்தது. பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மக்களைத் தொடர்பு கொண்டு அவர்களுடன் இணைந்திருக்க இந்த சேவை உதவுகிறது.

அதாவது இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் பிரபலங்களைப் பின்தொடர்வது போல் வாட்ஸ் அப்பிலும்  பின்தொடரலாம். வாட்ஸ் அப் சேனல் வசதி மூலம் இதை செய்யலாம். பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணி, கத்ரீனா கைஃப், விஜய் தேவரகொண்டா, தில்ஜித் தோசன்ஜ், அக்‌ஷய் குமார், விஜய் போன்ற பிரபலங்கள் வாட்ஸ் அப் சேனலில் இணைந்துள்ளனர். அந்த வரிசையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாட்ஸ் அப் சேனலில் இணைந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வேகமாக செயல்படும் முதல்வர் ஸ்டாலின், வாட்ஸ் அப் சேனல் மூலமாக அரசின் திட்டங்கள், முதல்வரின் அறிவிப்புகள் குறித்த தகவல்களை எளிதாக பெற முடியும்.