வாசுதேவநல்லூரில் பழங்குடியினர் பெருமை தின விழா பேரணி

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலம் இன்று நடைபெற்ற பழங்குடியினர் பெருமை தின விழா பேரணியில் சிவகிரி, கடையநல்லூர் கலைமான் நகர் பளியர் ஆகிய இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையில் கலந்து கொண்டனர். பேரணியை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணி வாசுதேவநல்லூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, சிவகிரி வருவாய் வட்டாட்சியர் செல்வகுமார், தென்காசி தனி வட்டாட்சியர் முருக செல்வி, சங்கரன்கோவில் தனி வட்டாட்சியர் பரிமளா மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

46 − = 43