திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள தளபதி சமுத்திரத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை தலைவருமான அப்பாவு முன்னேற்பாட்டில், தளபதி சமுத்திரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவை ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார், இதில் பணகுடி பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவரும் வள்ளியூர் மதிமுக ஒன்றிய செயலாளருமான சங்கரகுமார், மகளிர் உரிமைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்,
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அருள்ராஜ், வார்டு உறுப்பினர்கள் முருகேசன், சுப்புலட்சுமி, சுமதி, பிரேமா, அர்ஜுனன், பொன் வினிதா, பொன் சுஜிதா மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், நகர, பேரூர், வார்டு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர், மதியம் அறுசுவை விருந்து வழங்கிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அனைவருக்கும் நன்றி கூறினார்.