வள்ளலார் 200 முப்பெரும் விழா புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் 200 முப்பெரும் விழா புதுக்கோட்டையில் ஏப்ரல் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

புதுக்கோட்டை பால்பண்ணை அருகில் உள்ள லேணா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள விழாவில் உயிர்திரள் எல்லாம் ஒன்றெனக்கருதித் தனிப்பெரும்கருணை ஆட்சி நடத்திய வள்ளல் பெருமான் இவ்வுலகத்திற்கு வருவிக்க உற்ற 200வது ஆண்டு தொடக்கம், தர்மசாலை தொடங்கி 156 ஆவது ஆண்டு தொடக்கமும், ஜோதி தரிசனம் காட்டுவித்த 152 வது ஆண்டும் சேர்த்து வள்ளலார் 200 முப்பெரும் விழா காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற இருக்கின்றது.

இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் ரகுபதி, பி.கே.சேகர்பாபு, மெய்யநாதன், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் முரளிதரன், புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு, எஸ்.பி.வந்திதா பாண்டே மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் விழாவில் காலை உணவு, மதிய உணவு உள்ளிட்டவைகளுடன் வள்ளலார் பெருமகனாரின் வரலாற்று நிகழ்வுகள் கருத்தரங்கமாக நடைபெற இருக்கின்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட அனைத்து சமரச சுத்த சன்மார்க்க அன்பர்கள் அவர்தம் குடும்பத்தார்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

71 − = 62