வள்ளலார் 200வது ஆண்டை முன்னிட்டு அரியலூர் பெருமாள் கோயில் அன்னதானம்

வடலூர் வள்ளலார்  ராமலிங்கரின், 200 வது ஆண்டு அவதார தினத்தை முன்னிட்டு, அரியலூர் பெருமாள் கோவிலில், அகவல் பாராயணம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இது பற்றி அரியலூர் ஆலந்துரையார் கோதண்ட ராமசாமி திருக்கோயில் நிர்வாக அலுவலர் சரவணன் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு  முதல்வர்  மு க ஸ்டாலின்  ஆணைக்கிணங்க, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர்  வழிகாட்டுதலின்படி, வள்ளலாரின் 200 வது வருவிக்க உற்ற ஆண்டை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில், தொடர் அன்னதானம் நடைபெற்று வருகிறது.

அதையொட்டி  கடலூர் மண்டலத்துக்குட்பட்ட, அரியலூர் மாவட்டம், அரியலூர் நகர் அருள்மிகு  கோதண்ட ராமசாமி திருக்கோயிலில், 10. 9. 2023 மற்றும் 12. 9. 2023 ஆகிய இரு தினங்களில், தொடர் அன்னதானத் திட்டம் நடைபெற்றது. இதில் வள்ளலாரின், சைவ சுத்த சன்மார்க்க அடியார்கள், வள்ளலாரின் புகழைப் பரப்பும் பொருட்டு, அகல் பாராயணம் பாடப்பட்டு துவங்கப்பட்டது. இதில் அரியலூர் உதவி ஆணையர் நாகராஜ்  கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து 150 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.