வல்லத்திராகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராகோட்டை, இராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது. விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் குமார் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக காரைக்குடி ஓ சிறுவயல் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் பாரதிதாசன் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். தமிழின் சிறப்புகளையும், தமிழனின் பெருமையையும் ஒவ்வொரு மாணவனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு தமிழ் இலக்கியம் உதவும் என்றும் அதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் வாழ்க்கையை எளிமையாக, மகிழ்ச்சி உள்ளதாக ஆக்கிக் கொள்ள இலக்கியம் உதவும் என்றும் வாழ்த்தி இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். உதவித் தலைமை ஆசிரியர் குணசேகரன் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். முதுகலைத் தமிழ் ஆசிரியர் ரகமது நிஷா வரவேற்புரை ஆற்றினார். பட்டதாரி தமிழ் ஆசிரியர் முனைவர் வனிதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். முதுகலை ஆங்கில ஆசிரியர் ஆண்டனி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.